மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடடிடமும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன்ஸ் மெனேஜ்மன்ட் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 09ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தளை விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக, விருப்பம் கோரல் கடிதங்களை அனுப்புவதற்கு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதன்பின்னர், மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்கு 05 நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் குறித்த இரு நிறுவனங்களுக்கு விமான நிலையத்தின் நிர்வாகத்தை கையளிக்க அமைச்சரவை அனுமதி யளித்துள்ளது.