கிளிநொச்சியில் மனித எச்சங்களுடன் கூடிய ஆடை கண்டெடுப்பு

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்களுடன் கூடிய ஆடையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் நேற்று (25) கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே மனித எச்சங்களுடன் கூடிய ஆடையொன்று கண்டெடுக்கப்பட்டது.

இதன்பின்னர், பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் நீதவானுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று (26) குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

கண்ணிவெடி அகற்றும் பணியை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறும் எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்குட்படுத்த அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

Social Share

Leave a Reply