கொழும்பு கடுவெல-பொமிரிய பகுதியில் 30 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 15 கிலோகிராம் ஐஸ், 14 கிலோகிராம் ஹசிஸ் போதைப்பொருள்மற்றும் 941 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதான முப்பது வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 07 லட்சம் ரூபா பணம் மற்றும் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.