இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் மேற்கொண்ட
வெடிகுண்டுத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நேற்றிரவு (26)
குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மேலும் நால்வர் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.