பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, படகிலிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டதுடன் “அல் ரஸா” என்ற படகொன்றும் கைப்பற்றப்பட்டதுடன்
இந்த போதைப்பொருட்கள் சுமார் 86 கிலோ நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குஜராத்தில் உள்ள போர்பந்தர் மாவட்டத்திற்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.