சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளான மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் மே தினமாக கொண்டாடப்படுகின்றது.

18ம் நூற்றாண்டில், 12 முதல் 18 மணி நேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கும், தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியே மே தினம் உருவாக காரணமாக அமைந்தது.

இதன்போது, தொழிலாளர் உரிமைக்கான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின.

1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் எட்டு மணித்தியால வேலை கோரி அமெரிக்காவில் பாரிய போராட்டம் ஆரம்பமானது. சுமார் 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அடக்குமுறைக்கு மத்தியிலும் தொடர்ந்த போராட்டம், புரட்சியாக வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது. 

இதனை நினைவு கூறும் விதமாகவே தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில், 1934ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1956ம் ஆண்டு முதல் மே மாதம் 1ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply