ஹொரணயில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் சொகுசு வண்டியில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.