தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்படும் மதுபான உரிமங்கள்  

தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(07.05) தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மதுபான உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் எனவும், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்கள் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதேச செயலகத்தின், வெலங்கஹவல சந்தியில் மதுபான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் குறித்த உணவகம் மீள திறக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply