இரு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த நிதிக்குழு 

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நிதி தொடர்பான குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ள X தள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசா வழங்கலுடன் தொடர்புடைய நெருக்கடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே குறித்த இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply