பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று(09.05) அறிவித்தார்.
டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் நேற்று(08.05) வழங்கிய தீர்ப்பிற்கமைய, டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது அறிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்ற ஆசனம் நேற்று(08.05) முதல் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ட்டமையினால், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரே பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ளார்.