ரஷ்ய – உக்ரைன் போரில் 8 இலங்கையர்கள் பலி 

ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக ஆட்கடத்தற்காரர்களால் அனுப்பப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இந்த உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உயிரிழந்த போர் வீரர்களில் அறுவர் ரஷ்யாவிலும், இருவர் உக்ரைனிலும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உரியிழப்புகள் பதிவாகியுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மனித ஆட்கடத்தற்காரர்களால் இதுவரை 83 இராணுவ வீரர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களில் 60 பேர் ரஷ்யாவிற்கும், 23 பேர் உக்ரைனுக்கும் அனுப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply