ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்ரங்கில்
நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்கான பிரேரணைகள் பல நிறைவேற்றப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமையால்
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மாவட்ட மட்டத்தில்
கொழும்பிற்கு அழைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர்,
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

Social Share

Leave a Reply