சென்னைக்கு அதிர்ச்சியளித்த குஜராத் அணி – IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. 

அகமதாபாதில் இன்று(10.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. குஜராத் அணி சார்பில் அணித் தலைவர் சுப்மன் கில் 104 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

குஜராத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 210 ஓட்டங்களை இணைப்பட்டமாக பெற்றுக்கொண்டனர். சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் ரவீந்தர ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. சென்னை அணி சார்பில் டரில் மிட்செல் 63 ஓட்டங்களையும், மொயின் அலி 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

குஜராத் அணி சார்பில் பந்து வீச்சில் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரஹித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

இதன்படி, இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக குஜராத் அணித் தலைவர் சுப்மன் கில் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய குஜராத் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும், சென்னை அணி 12 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளது.

Social Share

Leave a Reply