யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி 

யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று(10.05) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று இரவு குழந்தையை பிரசவித்த நிலையில், குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்றுள்ளனர்.

சிறுமியும் அவரது தாயும் இன்று காலை முதல் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Social Share

Leave a Reply