இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
டயானா கமகேவைப் போன்று மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால், அவர்களும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என சோபித தேரர் சுட்டிக்காட்டியள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயற்பாடாகும் என தெரிவித்த தேரர், இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.