மன்னாரில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் கஞ்சி

மன்னார் மாவட்ட ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இன்று(11) காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தின் போது தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், மற்றும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து பள்ளிமுனை, பெருக்க மரத்தின் முன்பாக
“முள்ளிவாய்க்கால் கஞ்சி”தயாரித்து மக்களுக்கு வழங்கினர்.

பள்ளிமுனைமக்கள்,இளைஞர்கள் யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

இதேவேளை, அப்பகுதியைப் பார்வையிட வந்த சிங்களவர்களும் முள்ளிவாய்கால் கஞ்சியை ஆர்வத்துடன் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் கஞ்சி

Social Share

Leave a Reply