தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

இலங்கையில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் 17 மாவட்டங்களில் உள்ள 71 சுகாதார
மருத்துவ பிரிவுகளில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக
சமூக வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 22 ஆயிரத்து 943 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply