சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் 

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, உரிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்ன தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை பதிவு செய்யுமாறு சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply