பெரும்பான்மையான முன்பள்ளி ஆசிரியர்கள் டிப்ளோமா பட்டம் அற்றவர்கள் – சுசில் 

இலங்கையில் உள்ள 34,000 முன்பள்ளி(pre-school) ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுள் 6,000 பேர் மாத்திரமே டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் இன்று(14.05) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையில் 18,800 முன்பள்ளிகள்(pre-school) உள்ளதாகவும், டிப்ளோமா பட்டம் பெறாத ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களே முன்பள்ளிகளில் கற்றுக் கொடுப்பதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 

மொண்டிசோரி(Montessori) மற்றும் முன்பள்ளி(pre-school) என்ற சொற்களை பயன்படுத்துவது தவறானது என்றும், சரியான வார்த்தை ‘ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையம்’ எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

குழந்தை பருவ அபிவிருத்தி கல்வி(முன் பள்ளி), குழந்தைகளின் கல்வியில் மிக முக்கியமான நிலை என்பதால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த கல்விக்கு முதலிடம் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply