அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதன் பின்னர் அங்கு தலிபான்களின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அந்தவகையில் நாளாந்தம் புதிய புதிய விதிகளை கொண்டுவரும் தலிபான்கள் தற்பொழுது புதிய கட்டளை ஒன்றினையும் பிறப்பித்துள்ளனர்.
அதாவது இனிமேல் ஆப்கானிஸ்தான் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண் தொகுப்பாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றும் சமயங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் அது எத்தகைய முகக்கவசம் என்பது குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
எது எவ்வாறு இருப்பினும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் நாளாந்தம் அந்த அரசு புதிய புதிய சட்டங்களை விதித்து வந்தாலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் மாத்திரம் அவர்களின் ஆதிக்கம் கூடிக் கொண்டே செல்கின்றமை நிதர்சனமாகும்.