இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தம் நிறைவடைந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இன்றுடன் (18.05) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரன் இராணுவத்தால் கொல்லப்பட்டதையடுத்து யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்து.
யுத்தம் நிறைவைடந்த போது மஹிந்த ராஜபக்ச இலக்குகையின் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். அவரின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டார்.