பலத்த மழையுடனான வானிலை தொடருமாயின் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி களுகங்கை, களனி கங்கை, ஜிங் கங்கை, நில்வளா கங்கை, தெதுறு ஓயா, மகா ஓயா, அத்தனகலு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயாவை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.