நடைபெற்று வரும் ரஸ்சியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 411 பேர் ரஸ்சியா சார்பாக போரில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை முறைப்பாடுகள் அவர்களது குடும்பங்களிலிருருந்து கிடைக்கப்பெற்றுளளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆட்கடத்தல்காரர்கள் மூலம் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போரில் ஈடுபடுபவர்களில் முன்னாள் இராணுவத்தினர் மட்டுமன்றி, போர் தொடர்பில் எந்தவித அனுபவமற்றவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் மூலம் தெரியயவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகள் ரஸ்சியா பயணிக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஸ்சியாவில் போரில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு விசேட துரித சேவை இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அதன் மூலமாகவே இதுவரை 411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.