ஈரானின் ஜனாதிபதி எப்ராஹீம் ரைசி உயிர்வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என ஈரான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டேர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் உட்பட மேலும் சிலர் பயணித்த உலங்கு வானூர்தி நேற்று(19.05) மலைப்பகுதி ஒன்றில் சீரற்ற வாநிலை காரணமாக விபத்துக்குள்ளானது. தீவிரமாக தேடும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் விபத்துக்குள்ளான பகுதி இன்று காலை இனம் காணப்பட்டிருந்தது.
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி முழுமையாக எரிந்து போயுள்ளதாகவும், பயணித்த அனைவரும் இறந்து போயுள்ளதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாகவும் ரொய்ட்டேர்ஸ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.