பிரபல பொலிவூட் நடிகர் வைத்தியசாலையில்..!

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் வெப்பவாதம் உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஹமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டியை காண்பதற்கு அவர் மைதானத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

இதன்போது நிலவிய அதிக வெப்பம் காரணமாக அவர் வெப்ப வாதத்திற்கு உள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாருக்கான் நேற்றிரவு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் அவரது நிலை உடல் சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply