இங்கிலாந்தில் பொது தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..!

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதையடுத்து பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இந்நிலையில் தேர்தல் குறித்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்புக்குப் பின்னர் அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டடதையடுத்து பிரதமரானார்.

இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் முதன் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ளும் தேர்தல் இதுவாகும்.

2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 03வது பொதுத் தேர்தலாகும் இதுவாகும்.

Social Share

Leave a Reply