NPL – Jaffna Gladiators அணி இறுதிப்போட்டிக்கு தகுதி  

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு Jaffna Gladiators அணி தகுதி பெற்றுக்கொண்டது. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(26.05) நடைபெற்ற முதலாவது Mullai Panthers அணிக்கு எதிரான முதலாவது Qualifier போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக Jaffna Gladiators அணி இறுதிப்போட்டிக்கு தெரிவானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, Jaffna Gladiators அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் எஸ் அஜித் 47 ஓட்டங்களையும், இ டிலக்‌ஷன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். Mullai Panthers அணி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவர் அருணோதயம் அஞ்சயன் 3 விக்கெட்டுகளையும் கபிலன் மகேந்திரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

194 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Mullai Panthers அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. அணி சார்பில், அணித் தலைவர் அருணோதயம் அஞ்சயன் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். Jaffna Gladiators அணி சார்பில் பந்துவீச்சில் டி டனிசியஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் Jaffna Gladiators அணி 28 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக Jaffna Gladiators அணியின் டி டனிசியஸ் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version