இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் போட்டித் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதியும், டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணம் இலங்கை இளையோர் அணிக்கு, சிறந்த அணியுடன் மோதுவதற்கான வாய்ப்பாகவும் மாறுப்பட்ட நாடுகளில் விளையாடுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.