மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைவதற்கு வாய்ப்பு 

மின்சாரக் கட்டணத்தை 10-20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(29.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்த வருடத்தில் 2வது முறையாகவும் மின் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தினூடாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப தற்போது மின்சார சபையின் நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply