அரசாங்கத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பொது விவாதங்களுக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் இன்று(29.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அரசாங்கத்திலுள்ள கட்சித் தலைவர்கள் உட்பட எந்தவொரு கட்சியுடனும் எந்த நேரத்திலும் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் முன்மொழியப்பட்ட விவாதம் நகைச்சுவைக்குரியது என சிலர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் விவாதிப்பது நகைச்சுவைக்குரிய விடயமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.