பலவீனமானோர் புதிய அரசியல் முழக்கத்தை தேட முயற்சி – வஜிர

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மக்கள் ஆணையை வழங்குவதற்கு இலங்கை மக்கள் ஏற்கனவே வரிசையில் நிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கியவர்கள் தற்போது வெளியேறி வருகின்றனர். அதனால்தான் அரசியல் கட்சிகள் பல்வேறு கோசங்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் முழு நாட்டு மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட வஜிர அபேவர்தன அரசியல் ரீதியாக பலவீனமான மற்றும் அதிருப்தி கொண்ட குழுக்கள் புதிய அரசியல் முழக்கத்தை தேட முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply