ரஷ்யா – உக்ரெய்ன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இலங்கை தூதுக்குழு அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (30.05) கருத்து தெரிவித்த அவர் இலங்கை தூதுக்குழுவினர் அடுத்த மாதம் 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரெய்ன் போரில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்தில் 455 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இலங்கை அதிகாரிகள் இதுவரை 26 பேரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேலும் தெரிவித்தார்