2012ம் ஆண்டு கிரீஸ் திறைசேரி வழக்கில் கப்ரால் விடுதலை 

2012ம் ஆண்டு கிரீஸ் அரசாங்கம் வழங்கிய திறைசேரி பத்திரங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐவர் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.05) விடுதலை செய்துள்ளது. 

கிரீஸ் திறைசேரி பத்திர முதலீடுகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. 

2012ம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டிருந்த போது, ​​கிரீஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட திறைசேரி பத்திரங்களை மத்திய வங்கி கொள்வனவு செய்ததாக சுஜீவ சேனசிங்க தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். இதனுடாக இலங்கை அரசாங்கத்திற்கு 1.84 ரூபா பில்லியன் நட்டம் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு ஐந்து நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. 

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தர்மசேன தீரசிங்க, வசந்த ஆனந்த சில்வா, சந்திரசிறி ஜயசிங்க மற்றும் கருணாரத்ன ஆகியோருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் குறித்த வழங்கிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.05) விடுதலை செய்துள்ளது.

Social Share

Leave a Reply