173,444 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி 

2023ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 173,444 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெற்றுள்ளனர். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், இம்முறை 64.33 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

2023ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 40,556 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தமாக 269,613 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 

இவர்களுள் 151,343 பாடசாலை மாணவர்கள் மற்றும் 22,101 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தமாக 173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, 146 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 44 தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Social Share

Leave a Reply