நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் எஹலியகொட பிரதேசத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி,குறித்த பகுதியில் 427 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் அனைவரும் ஹெலிகப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.