தாய்வான் திறந்த தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் தருஷி கருணாரத்ன தங்கம் வென்றார். இவர் ஓட்டத்தை 2.04.74 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடத்தை கைப்பற்றினார்.
தாய்வான் திறந்த தடகள போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டத்தை 52.48 வினாடிகளில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றமை சுட்டிக்காட்டத்தக்கது.