ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ஹிருணிகா தொடர்வதில் சந்தேகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டால், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை தானே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஒப்புக்கொள்ள மாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹிருணிகா, கட்சியில் உள்ள ஏனையவர்கள் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் உரிய நபர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பை வழங்கியமையினால் நீதிமன்றத்தினுடாக அதனை இரத்து செய்ய முடிந்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார். 

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 2016ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

Social Share

Leave a Reply