IMF இரண்டாவது மதிப்பாய்வு அடுத்த வாரம் 

IMF இரண்டாவது மதிப்பாய்வு அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மதிப்பாய்வு தொடர்பில் அடுத்த வாரம் ஆராயப்படவுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டத்தில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

இதன்போது,  இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் பொருளாதார  சீர்திருத்த முன்னேற்றங்ள் தொடர்பில்  மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து நாடுகளின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தனது ‘X’ தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Social Share

Leave a Reply