தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கட்சியின் செயலாளரும் நாடாளமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன் காரியாலத்தில் நேற்று (02.06) ஊடக மாநடு இடம்பெற்றது.

இதன்போது,கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply