சம்பள விவகாரம் – நீதிமன்ற உத்தரவு, தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதமாக அமைந்ததா?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03.06) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி நியாயமானது எனவும் அதனை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார உள்ளிட்டோரை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Social Share

Leave a Reply