இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

களனி மற்றும் கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் (04.06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடுவெல கல்வி கோட்டப்பிரிவு பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும்
மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மாகாண கல்விப் பணிப்பாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply