எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த நாட்களில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.