IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் மாத்தறையில் திறப்பு 

IDM Nations Campus International (IDMNC) மாத்தறையில் தனது கிளையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கலாநிதி வி ஜனகனின் தலைமையின் கீழ், IDM பல்கலைக்கழகம் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்கில் பல்கலைக்கழக நடவடிக்கைகள் இவ்வாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் AIBT உடன் இணைந்து  மாத்தறையில் ஜூன் 2ம் திகதி அதன் கிளையை ஆரம்பித்தது. IDMNC சர்வதேச மாத்தறை பல்கலைக்கழகம் அனுபவம் வாய்ந்த கலாநிதி மோகன் பத்திரனாவால் வழி நடத்தப்படவுள்ளது

இதன் ஆரம்ப நிகழ்வானது மாத்தறை கிளையின் முகாமையாளர் இரேஷா விதானபத்திரன மற்றும் அவரது குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடனக் கலைஞர்களின் பாரம்பரிய நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, கலாநிதி வி ஜனகன் இலங்கையின் கல்வி மற்றும் கலாசார விழுமியங்களை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். மேலும், மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 

கல்வித்துறையிலுள்ள பரந்த அனுபவம் இந்த கூட்டு முயற்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என கலாநிதி மொஹான் பத்திரன தெரிவித்தார். தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வியை வழங்குவதற்கான தனது விருப்பினையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். 

தொழிற்கல்வியின் ஊடாக பாடசாலையிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மாறுபட்ட வாய்ப்பினை வழங்குவதாக IDMNC சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி லியோனல் பின்டோ தெரிவித்தார். இதனுடாக உலகளாவிய ரீதியில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.   

இந்நிகழ்வில் AIBT இன் இயக்குநர் லக்‌ஷிகா பத்திரன, AIBT பல்கலைக்கழகத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சுரேஷ் குரே மற்றும்  மற்றும் IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் AIBT இன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply