இலங்கை மின்சார சட்டமூலம் இன்று (06.06) பாராளுமன்றத்தில் 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சியால் வாக்கெடுப்பு கோரப்பட்டது.
இதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பின்னர், குழுநிலையின் போது சட்டமூலத்திற்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.