மாலைதீவு மூத்த பிரஜைகளுக்கு இலங்கையில் நிரந்தர வதிவிடம் 

மாலைதீவின் மூத்த பிரஜைகள் நிரந்தர வதிவிடங்களை அமைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஷமீர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஷமீர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பின் போது இலங்கையின் விசா வழங்கும் முறைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய விசா முறைமைகளை அறிமுகப்படுத்தியமைக்காக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply