கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைந்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர், ஜெனரல் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (24/11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொவிட் மரண வீதம் அதிகரித்து செல்லும் நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதாகவும், தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முன்னர் காட்டிய ஆர்வம் தற்பொழுது மிக நன்றாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் தாமதிக்காது உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.