குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்

மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கடந்த சம்பவம் செவ்வாய் கிழமை (11/06)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த வேளையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அப்பகுதியில் காணப்படும் ஆல மரமொன்றில் நீண்ட காலமாக குளவிக் கூடு இருந்து வருதாகவும் குளவிகளால் அப்பகுதி மக்களுக்கு அச்சம் காணப்படுவதாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அயலில் பாடசாலையும் காணப்படுவதாகவும் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ரோகினி் நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply