தபால் ஊழியர்கள் நேற்று(12.06) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இடையூறுகள் காணப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.