ஐரோப்பா கிண்ணத்தை அபார வெற்றியுடன் ஆரம்பித்த ஜேர்மனி

ஜேர்மனி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் ஐரோப்பா கிண்ணத்தின் 1 ஆவது போட்டி இன்று (15.06) அதிகாலை ஜேர்மனியிலுள்ள முனிச்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜேர்மனி அணி 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜேர்மனி அணி சார்பாக பிளோரியன் விர்ட்ஸ் 10 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தார். ஜமல் முசியலா 19 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 44 ஆவது நிமிடத்தில் ஸ்கொட்லாந்து வீரரான ரயான் போர்டியஸ்ஸிற்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற, கை ஹவெர்ட்ஸ் மூன்றாவது கோலை 45 ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் அடித்தார். நிக்லஸ் புல்கர்க் 4 ஆவது 68 ஆவது நிமிடத்தில் அடித்தார். ஜேர்மனி வீரரான அன்டோனியோ ருடிகர் ஸ்கொட்லாந்து அணிக்கு ஓன் கோல் முறையில் முதலாவது கோலை 87 ஆவது நிமிடத்தில் பெற, 90 ஆவது நிமிடம் எம்ர் கான் 5 ஆவது கோலை ஜேர்மனி அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

Social Share

Leave a Reply