சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட 900 சாரதி பயிற்சி பாடசாலைகள்

சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 1500 சாரதி பயிற்சி பாடசாலைகள் இயங்கி வருவதாகவும் அவற்றில் 600 சாரதி பயிற்சி பாடசாலைகள் மாத்திரமே சட்டரீதியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியுடன் இயங்குவதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தாங்களாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளை ஆரம்பித்து பதிவு செய்த ஓட்டுநர் பயிற்சி பாடசாலைகளை சட்டவிரோதமாக தொடர்பு கொண்டு அவற்றை நடத்தி வருவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாரதி பயிற்சி பாடசாலைகளில் சாரதி பயிற்றுநர்கள் சேர்க்கப்படவில்லை என்றும், 600 சாரதி பயிற்றுநர்களுக்கு நேற்றுமுன்தினம் (14) உரிமம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Social Share

Leave a Reply